இரண்டு ஷீரடி(கள்) உள்ளன

முன்னுரை

இந்த பதிவின் தலைப்பு, நாங்கள் எதார்த்தமற்ற ஒன்றை உரைப்பது போல தோன்றலாம். சாயிபாபாவிடமிருந்து கற்றுக்கொண்டதை மட்டுமே பகிர்ந்து கொள்கிறோம். அடுத்த பதிவின் தலைப்பு என்னவென்பதை, அவர் எமக்கு பரிந்துரைக்கும் வழிகள் புதிரானவை. இங்கு எழுதப்படும் ஒவ்வொரு பதிவும் எங்களது எண்ணங்கள் மற்றும் பாபாவின் வழிகாட்டலையும் சார்ந்துள்ளது. இந்த இடுகைக்கு எம்மை இட்டுச் சென்ற லீலையை நாங்கள் பதிவிட போவதில்லை. அப்படிச் செய்தால், நாங்கள் ஒரு மிக பெரிய நூலை எழுதுகிறோம் என்று அர்த்தம். ஆனால் தற்போது, ​​நாம் தெரிவிக்க விரும்பும் ஒரு மிக முக்கியமான செய்தியில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த இடுகையின் முடிவில், எதார்த்தமற்றது என்ற வரையறுக்கக்கூடிய எதிலும் நாங்கள் இல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

சாய்பாபாவின் பதினொரு உறுதிமொழிகள், சாய்சகுணோபாஸ்னாவில் சாயி பக்தர்கள் காணும் முதல் நூலாகும். ஒவ்வொரு பக்தரும் இந்த வாக்குறுதிகளை சாய்பாபாவின் வாக்குறுதிகளாகக் கருதி ஈர்க்கப்படுகிறார்கள். ஆம் அது உண்மையே. இருப்பினும், உரையின் அசல் ஆசிரியர் பற்றி உறுதியான ஆதாரம் இல்லை. இது அதிகம் பரப்பப்பட்டது போல் தெரிகிறது, அதனால் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் போது திரிந்த பொருளைக் காண்கிறோம். மராத்தி தெரியாத பக்தர்களின் வசதிக்காக, பிற மொழிகளிலும் வாக்குறுதிகளைப் பகிர்ந்துள்ளோம். இருப்பினும், இந்த ஆய்வுரையில் மராத்தி பதிப்பைக் கருத்தில் கொள்ளப் போகிறோம்.

11 Promises Of Sai Baba – ஷீரடி சாய்பாபாவின் 11 வாக்குறுதிகள்

  1. உங்கள் பாதங்கள் ஷீரடி மண்ணைத் தொடும்போது, ​​ உங்களின் அணைத்து அபாயங்களும் நேராமல் தடுக்கப்படும்.
  2. எனது சமாதியின் படிகளில் ஏறிச் செல்பவரின் துக்கம் தோல்வியுறும்.
  3. இந்த பூத உடலை நான் துறந்தாலும், என் பக்தர்களுக்கு உதவி செய்ய ஓடி வருவேன்.
  4. எனது சமாதி உங்கள் சங்கல்பத்தை நிறைவேற்றும். என் மீது திடமான நிலையான உறுதியுடன் நம்பிக்கை செலுத்துங்கள்.
  5. நான் அழிவற்றவன். இந்த உண்மையை அறிந்து கொள்ளுங்கள். மற்றும் எப்போதும் எனது அழிவில்லாத அனுபவங்களைப் பெறுங்கள்.
  6. என்னிடம் கான்பிப்பாயாக . என்னிடம் அடைக்கலம் தேடி, கைவிடப்பட்ட எவரேனும் இருந்தால் எனக்குக் காண்பியுங்கள்.
  7. ஒரு பக்தன் எந்தத் அளவிலான ஆர்வத்தோடும், பக்தியோடும் என்னிடம் பிரார்த்தனை செய்கிறானோ, அதே தீவிரத்தோடு நானும் பதிலளிப்பேன்.
  8. சதாகாலமும் உங்கள் வாழ்க்கையின் சுமையை நான் எப்போதும் சுமப்பேன். அல்லது என்னுடைய இந்த வாக்குறுதி பொய்யாகிவிடும்.
  9. என் உதவியை நாடுபவர்கள் அதை ஏராளமாகப் பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும் அவர்கள் எதைக் கேட்டாலும் அவர்கள் அதை பெறுவார்கள்.
  10. எவன் என்னிடம் முழுமையாக சரணடைந்தானோ, அதுவே அவனது உடல், பேச்சு, மனம், புலன்கள், புத்தி மற்றும் உள்ளார்ந்த நிலைபேறு சரணாகதி ஆகும் , நான் அவருக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
  11. என் மீது தீவிர பக்தி கொண்டவராகவும், எவருடைய நம்பிக்கை என் காலடியில் உறுதியாக இருக்கிறதோ, தொடர்ந்து ‘சாய்சாய்’ என்று ஜபம் செய்து என்னுடன் ஒன்றிவிடுகிறாரோ அவர் என் அருளாலும் ஆசீர்வாதங்களாலும் நிரப்பப்படுவார்.

சாய்பாபாவின் 11 வாக்குறுதிகள் – விளக்கம்:

வாக்குறுதி 1

உங்கள் பாதங்கள் ஷீரடி மண்ணைத் தொடும்போது, ​​ உங்களின் அணைத்து அபாயங்களும் நேராமல் தடுக்கப்படும்

எங்களது விளக்கம்: இங்கு ‘அபாய’ என்ற சொல்லை ஆன்மாவின் கெட்ட கர்மாவாகக் கருதுகிறோம். ஆன்மா பல உடல்களைக் கடந்து ஷீர்டியை அடைந்தால், அனைத்து கெட்ட கர்மங்களும் தூய்மைபடுத்தப்படுகிறது. எந்த ஒரு ஆத்மாவும் ஒரு உடலில் ஷீரடியை அடைய முடியாவிட்டால், அதன் கெட்ட கர்மா அதனுடன் இருக்கும் என்று அர்த்தமல்ல . பாபாவின் நாமத்தை எடுத்துக்கொள்வதன் மூலம், நாம் கெட்ட கர்மாவின் விளைவைப் போக்கலாம். கெட்ட கர்மாவிலிருந்து விடுபட, கெட்ட செயல்களின் விளைவை நீக்கும் நல்லதைச் செய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல என்பதை கருத்தில் கொள்வோம். எனவே பாபாவை நினைவு கூர்வதும், நம் இதயத்தில் நிறுவ செய்து, மானசீகமாக அவரை வணங்குவதும், நாம் முன்னேறிச்செல்ல உதவும்.

வாக்குறுதி 2

எனது சமாதியின் படிகளில் ஏறிச் செல்பவரின் துக்கம் தோல்வியுறும்.

எங்களது விளக்கம்: இந்த வாக்குறுதியில், பாபா தனது பக்தரை தனது சமாதியை தரிசனம் செய்ய அழைக்கிறார் மற்றும் உடல் உபாதைகள் முடிவடைய உறுதி செய்கிறார். இருப்பினும் மகிழ்ச்சியை அடைய நாம் ஆனந்தமான மனநிலையில் இருக்க வேண்டும். பௌதிக துன்பம் எனப்படும் இன்னல்கள் இருப்பினும் அது நம்மை பாதிக்காது. ஆனந்த நிலையில் இருக்க நாம் எங்கும் பாபாவின் இருப்பை உணர வேண்டும். இதை செய்தால், ஷீரடியில் நாம் இருக்கும் அனுபவத்தை உணரலாம். ஷீரடி செல்ல வேண்டும் என்ற இதயத்தின் ஏக்கம் மெல்ல மெல்ல விலகத் தொடங்கும். இந்த நிலையில் இருந்தால் துக்கமும் மகிழ்ச்சியும் ஒன்றாகவே இருக்கும். இதனால் நாம் பாபாவுடன் ஷீரடியில் இருப்பதாக உணர்வோம் .

வாக்குறுதி 3

இந்த பூத உடலை நான் துறந்தாலும், என் பக்தர்களுக்கு உதவி செய்ய ஓடி வருவேன்.

எங்களது விளக்கம்: இந்த வாக்குறுதிக்கு நம்மில் பலர் சான்றுரைப்போம். பாபா தனது மஹாசமாதிக்குப் பிறகு கூடுதல் சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் கொண்டு பணிபுரிவதை நாம் உணர்த்திருப்போம். அவர் சர்வவ்யாபியாகவும், எந்நேரத்திலும் எங்கும் தோன்ற கூடியவர். அவர் தூய்மையான உணர்வுடன் இருந்தார், அந்த நிலையை அடைவதற்கான வழியைக் காட்ட அவர் நமது பாபாவின் அவதாரத்தை எடுத்துக் கொண்டார். அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதைக் நாம் நம் கருத்தில் கொண்டு, நமது கடமையை நிறைவேற்றி, உலக கிரியைகளை உணர்வோடு மேற்கொண்டு, பிரம்ம ஞானத்தை அடைவதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த உணர்வு இருந்தால் பாபாவை எங்கும் காணலாம். அதனினும் முக்கியமாக அவரை நம் இதயங்களில் காணலாம். அதனால் நமது இதயம் ஷீரடியாக மாறும்.

வாக்குறுதி 4

எனது சமாதி உங்கள் சங்கல்பத்தை நிறைவேற்றும். என் மீது திடமான நிலையான உறுதியுடன் நம்பிக்கை செலுத்துங்கள்

எங்களது விளக்கம்: சாயிபாபா ஒரு குறிக்கோளோடு இந்த பூமியில் அவதரித்தார். மனிதர்களின் துயர நிலையிலிருந்து ஆன்மாவுக்கு நிம்மதி தருவதே நோக்கமாகும். அத்தகைய ஆன்மாக்களின் அத்யாவச்யமாக, குரு திகழ்கிறார். அவர்களின் உண்மையான ஸ்வரூபம் என்னவென்பதை உணர உதவும் ஒரு வழிகாட்டியாவர். உயர்ந்த நிலை பெற்ற ஆன்மாக்கள் இயல்பாகவே கட்டுண்ட நிலையிலிருந்து விடுபட தோன்றும். ஆன்மாவை மீட்க ஒரு வழிகாட்டி வரும்போது, ​​ஆன்மாவின் தேவைகள் பூர்த்தியாகும். பாபா தனது பூதாவுடலில் இருந்தபோதும், இப்போது பரம்பொருளாகத் திகழும் அவர் கூடுதல் வேகத்துடன் பணிபுரிகிறார். ஒரு பக்தனின் வாயிலாக மீண்டும் உரைக்கிறேன். மிகுந்த அன்பு கொண்ட நாம் இயற்கையாகவே நமது சத்குரு சாய்நாத் மஹராஜின் பக்தராக திகழ தகுதி பெறுகிறோம், ஆம் தீவிர பக்தருக்கு மோட்சம் அல்லது சாயிமயத்துடன் சங்கமிப்பது எல்லாம் ஒன்றுதான். ஆனால் நாம் தீவிரமாக இருக்க வேண்டும் மற்றும் உள் உணர்வைப் பற்றிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நீங்கள் பாபாவுடன் நிலையான தொடர்பை உணர்வீர்கள், மேலும் நீங்கள் எண்ணி பார்க்க முடியாத அளவிற்கு அவர் உங்களை அழைத்துச் செல்வார். இதன்மூலம், எப்போதும் ஷீரடியில் இருக்க வேண்டும் என்ற உங்கள் கனவை, நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

வாக்குறுதி 5

நான் அழிவற்றவன். இந்த உண்மையை அறிந்து கொள்ளுங்கள். மற்றும் எப்போதும் எனது அழிவில்லாத அனுபவங்களைப் பெறுங்கள்.

எங்களது விளக்கம்: நமது வாழ்வின் இலக்கை அறிய சாயிபாபா பௌதிக உடலில் தோன்றினார். நாம் எத்தனை பிறவிகளை கடந்தோம் என்பது நமக்கு தெரியாது, எனினும் அவர் எப்பொழுதும் நம்முடன் தான் இருந்துகொண்டிருக்கிறார். ஒரு ஆன்மா தோன்றிய காலத்திலிருந்து, அதன் பயணத்தில் அவர் துணையாக இருந்தார். ஆனால் ஆன்மா பிறந்த பிறகு மீண்டும் பிறப்பெடுப்பதை பாபா விரும்புவதில்லை. ஆன்மாவின் பயணம் முடிவுக்கு வர வேண்டும் என அவர் விரும்புகிறார், அதனால்தான் அவரும் நம்மிடம் வந்தார். ஒவ்வொரு ஆன்மாவின் பயணத்தையும் அதன் உயர்நிலையையும் அவர் அறிவார். அவர் காலத்தில் பிறந்த பக்தர்கள் உயர்ந்த ஆத்மாக்களாக இருந்தனர், இதனால் அவர்பால் ஈர்க்கப்பட்டனர். நம் பங்கிற்கு அவரை எப்போதும் நினைவில் கொண்டு, சுவாச வேளையிலும் அவரை உணர வேண்டும். இந்த வழியில் மெதுவாக உணர்வு நிலையை அடைந்து இறுதியில் பாபாவின் அசல் வடிவத்தை அடைய முடியும்.

பாபா சர்வவ்யாபியாகவும் சாசுவதமான உண்மையாக திகழ்ந்தாலும், “என் சமாதி உங்கள் சங்கல்பத்தை நிறைவேற்றும்” என்ற வாக்கியத்தின் மூலம் அவர் முழுமையான உண்மை பொருளாக இருக்கிறார். உயிரற்ற பொருட்களிலும் தான் எங்கும் நிறைந்திருப்பதாக பாபா அறிவிக்கிறார். நாம் இதை, அவருடைய மூர்த்தியாகவும் (ஷீரடி சாய்பாபாவின் சிலை) எடுத்துக்கொள்ளலாம். நாம் வசிக்கும் இடத்திலும், பணிபுரியும் இடத்திலும் அவருடைய சகுணமூர்த்தியை நிறுவியிருப்பதால், அந்த மூர்த்தி எப்பொழுதும் நம்முடன் இருப்பதைக் குறிக்கிறது. எனவே நாம் ஒவ்வொரு கணமும் ஷீரடியில் இருக்கிறோம்.

வாக்குறுதி 6

என்னிடம் கான்பிப்பாயாக . என்னிடம் அடைக்கலம் தேடி, கைவிடப்பட்ட எவரேனும் இருந்தால் எனக்குக் காண்பியுங்கள்.

எங்களது விளக்கம்: சாயிபாபாவிடம் செல்பவர் அவருடையவராகிறார். ஆன்மாவை உயிர்ப்பிக்க பாபா உறுதியளிக்கிறார். அவரிடம் ஈர்க்கப்பட்ட ஆத்மாக்கள் ஆனந்தத்தில் மிதந்து சாய்பாபாவாக மாறுகிறார்கள். பாபா அவர்கள் உயர்ந்த நிலையில் இருப்பதை உறுதி செய்தார், அதனால் இது ஒவ்வொரு பக்தரின் அனுபவமாக இருக்கிறது. சாய்பாபாவின் கூற்றின்படி அவருடைய பக்தராக திகழ்பவர் அவனுடைய விருப்பத்தினால் பாபாவை தேர்வு செய்யவில்லை. அவர்கள் பாபாவால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆன்மாக்களின் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை பாபா அறிந்திருக்கிறார், மேலும் ஆன்மா இன்னும் எவ்வளவு கடந்து செல்ல வேண்டும், அவர்/அவள் எவ்வளவு தூரம் இலக்கின் அருகில் உள்ளார் என்பதை அவர் அறிவார். எனவே, பாபாவிடம் முக்தியின் பாதையைக் காட்டும்படியும், அவர் ஷீரடியில் வசித்ததைப்போல் நம் இதயத்தில் தங்கி, நம்மை எப்போதும் வழிநடத்தும்படி கேட்கலாம்.

வாக்குறுதி 7

ஒரு பக்தன் எந்தத் அளவிலான ஆர்வத்தோடும், பக்தியோடும் என்னிடம் பிரார்த்தனை செய்கிறானோ, அதே தீவிரத்தோடு நானும் பதிலளிப்பேன்.

எங்களது விளக்கம்: கடந்த ஆறு புள்ளிகளில் நாம் ஆய்வுரையை இது நேரடியாக உறுதிப்படுத்துகிறது. நாம் அவரை அழைக்கும் விதத்தில் அவர் பதிலளிக்கிறார். நாம் உலகிய வாழ்வின் தேவைகளை கேட்டால், ஆன்மஞானம் என்கிற வரத்தை அவரிடமிருந்து பெறுவோம் என்ற நம்பிக்கையில் அவர் நிச்சயமாக நாம் வேண்டுவதை வழங்குவார். அவரிடம் முக்தியைக் கேட்டால் முதலில் கர்மங்களின் பிடியிலிருந்து நம்மை விடுவித்து அங்கே அழைத்துச் செல்வார். எனவே அவர் நமக்கு என்ன கொடுக்க விரும்புகிறார் என்று அவரிடம் கேட்போம், மேலும் நமது வாழ்வின் இலக்கை நோக்கி பயணிப்போம். இலக்கில் கவனம் செலுத்தி, அந்த திசையில் நம்மை வழிநடத்த பாபாவிடம் பக்தி மற்றும் பிரார்த்தனையுடன் கடமைகளைச் செய்வோம். இதனால் நம் இதயம் ஷீரடி ஆகுகிறது.

வாக்குறுதி 8

சதாகாலமும் உங்கள் வாழ்க்கையின் சுமையை நான் எப்போதும் சுமப்பேன். அல்லது என்னுடைய இந்த வாக்குறுதி பொய்யாகிவிடும்.

எங்களது விளக்கம்: நம் சாய்பாபா காட்டிய எளிய வழியின் மூலம், நாம் அவரை முழுமையாக நம்பலாம் என்ற உணர்வு ஏற்படுகிறது. அவர் மீதுள்ள நம்பிக்கையையும் பக்தியையும் பற்றிக்கொண்டால், நம் இலக்கை எளிதில் அடையலாம். நாம் அவரிடம் நம்மை முழுமையாகச் சமர்ப்பித்து, முக்தியைப் பெற வேண்டும். மனிதர்கள் தொடர்ந்து உலக சாதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணிகளை பாபாவிடம் சமர்ப்பித்து, அவருடைய பாதங்களில் சரணடைந்து, உரிமைகையும் சமர்ப்பித்து, நாம் முழுமை பெறுவதற்கு நம்மை அர்ப்பணிக்கலாம்.

வாக்குறுதி 9

என் உதவியை நாடுபவர்கள் அதை ஏராளமாகப் பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். மேலும் அவர்கள் எதைக் கேட்டாலும் அவர்கள் அதை பெறுவார்கள்

எங்களது விளக்கம்: நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அவரிடம் சமர்ப்பித்தல் அவர் அவற்றைக் கவனித்துக் கொள்ளப் போகிறார் என்ற விளக்கத்தை இந்த புள்ளி மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உலக சாதனைகள் இல்லாமல் நாம் மோட்ஷசம் அடைய முயற்சிப்போம், அதைத்தான் பாபா எப்போதும் கொடுக்கத் தயாராக இருக்கிறார். எந்த இடத்திலும் ஷீரடியை உணர்வதற்கும் , எப்பொழுதும் சாயி உணர்வில் இருப்பதற்கும், உங்கள் இதயத்தை ஷீரடியாக மாற்றுவதற்கு, அவர் மீது உறுதியான நம்பிக்கை வைத்து, அவரை நம் இதயங்களில் பதிய வைப்போம்.

வாக்குறுதி 10

எவன் என்னிடம் முழுமையாக சரணடைந்தானோ, அதுவே அவனது உடல், பேச்சு, மனம், புலன்கள், புத்தி மற்றும் உள்ளார்ந்த நிலைபேறு சரணாகதி ஆகும் , நான் அவருக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

எங்களது விளக்கம்: பாபா அன்பின் அவதாரம். நம்முடைய எளிய அன்பான செயல்களுக்கு அவர் பதில் அளிப்பர் . துன்புறுத்தப்பட்ட ஆன்மாக்கள் மீது அவரது கொண்ட அன்பு, அவரை நாம் சாயி என்று அழைக்கும் அவதாரத்தை எடுக்க வைத்தது. எனவே அன்பான மற்றும் உன்னதமான இதயத்துடன் அவரிடம் பிரார்த்தனை செய்தால், அவர் அந்த பக்தராக மாறுகிறார். அவரை “கடனாளி” என்று அழைப்பது இழிவானதாக இருக்கும், ஆனால் அதை வேறு கோணத்தில் பார்க்க முடியும், ஒரு நபர் அனைத்து வழிகளுடனும் புலன்களுடனும் அவரிடம் சரணடைந்தால், பாபா ஒவ்வொரு வினாடியும் பக்தருடன் இருப்பார், ஒவ்வொரு எண்ணம் மற்றும் வார்த்தையையும் நிஜமாக்குகிறார். கடவுள் எப்போதும் பக்தர்களின் அன்பிற்காக ஏங்குகிறார். பக்தர்கள் சரணடையும் போது, ​​பரபிரம்மமாகிய பாபா அதே விதமாக பிரதிபலிப்பார். பாபாவிடம் அர்ப்பணிப்புடன் இருப்பதின் மகிழ்ச்சி, ஷீரடியில் இருப்பதைப் போல, பாபாவிடம் நெருக்கமாக இருப்பதை உணர வைக்கும்.

வாக்குறுதி 11

என் மீது தீவிர பக்தி கொண்டவராகவும், எவருடைய நம்பிக்கை என் காலடியில் உறுதியாக இருக்கிறதோ, தொடர்ந்து ‘சாய்சாய்’ என்று ஜபம் செய்து என்னுடன் ஒன்றிவிடுகிறாரோ அவர் என் அருளாலும் ஆசீர்வாதங்களாலும் நிரப்பப்படுவார்.

எங்களது விளக்கம்: இந்த கலியுகத்தின் சாதனா சாயி யுகமாக்குவதற்கான மிகப் பெரிய வழிமுறையைப் பற்றி கடைசிப் புள்ளி கூறுகிறது. இந்த உலகில் ஒரு குடும்பத்தில் ஒருவராவது பாபாவை வழிபட்டால், பாபா குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவனித்துக் கொள்வார் என்று கற்பனை செய்து பாருங்கள். உலகம் முழுவதும் சாய் சாய் என்று முழக்கமிடுவதைப் பார்ப்பது அருமையாக இருக்குமல்லவா? எனவே சமுதாயத்தை மாற்ற ஒரு குடும்பத்தில் ஒருவர் சாயின் வழியை பின்பற்றலாம் . அவரிடம் அர்ப்பணிப்புடன் இருக்கும் போது, ​​ஒரு நாளைக்கு நான்கு முறை ஆரத்தி செய்யவோ அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையில் மந்திரங்களை ஜபிக்கவோ எதிர்பார்க்கப்படுவதில்லை.

எனவே இரண்டு ஷீரடி(கள்) உள்ளன, ஒன்று அஹமத்நகரிலும் மற்றொன்று நமது “அஹம்”! (இதயம்) என்று கூறி நிறைவு செய்கிறோம்.

© Shirdi Sai Baba Life Teachings and Stories – Member of SaiYugNetwork.com

Sign up to receive awesome content in your inbox

We don’t spam!

Share your love
Hetal Patil
Hetal Patil
Articles: 488

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *